Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

வலை

வலை
கருணாகரன்

 

கத்தியில் உறங்கியது வஞ்சனை
தந்திரங்களில் ஊறிய சொற்களை வைத்து
நடக்கும் சதுரங்க ஆட்டத்தின் முன்னே
பொருத்தி வைக்கப்பட்ட கால்களை நம்பமுடியாத
பதற்றத்தோடு
ஒவ்வொருவரும் காத்துள்ளோம்.

பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி
மசகு எண்ணெயின் விலையேற்றம்
காடழிவு புயல் மழை வெள்ளப் பெருக்கு
போர்
பட்டினிப் பெருக்கில் அள்ளுப்படும் பல்லாயிரம் வயிறுகள்...

மூண்டெரிகிறது பசிப் பெருந்தீ
ஆதித்தீ அது

ஒவ்வொரு தலையிலும் பின்னப்பட்ட ஏராளம் வலைகள்
புலன் வழிகளை பின்னுகின்றன பெரும் வலையாய்

சிறிய சிலந்திகள்
பெரிய சிலந்திகள்
அமெரிக்கச்சிலந்தி
இந்தியச் சிலந்தி
சீனச்சிலந்தி
ரஷ்யச்சிலந்தி
ஐரோப்பிய வெள்ளைச் சிலந்தி

இன்னும் சார்க், கொமன்வெல்த், ஐரோப்பிய ஒன்றியம்,
ஒபெக் அது இது என்ற ஏராளம் சிலந்திகள்
பின்னும் ஏராளம் வலைகள்.

ஒரு சிலந்தி இன்னொன்றின் பொறி
ஒன்று வேறொன்றை எதிர்க்கிறது
ஒன்று இன்னொன்றைத் தின்கிறது
சில சேர்ந்து வலையைப்பின்னுகின்றன
சில சேர்ந்து வலையை அறுக்கின்றன
ஆனால் வலையைப்பின்னுவதிலிருந்து
ஒருபோதும் அவை பின்வாங்கவேயில்லை.

சிலந்தியின் இயல்பூக்கம் பெருகப் பெருக
சிறுத்திறுகுகிறது பூமி

நம் காலடியிலும் வலை
நம் தலையிலும் வலை

வலையில் சிக்கிய பறவைகள்
வேடனிடமா
வான வெளியிலா?

00

4/1/2012 12:38:48 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:



உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்