Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

நினைவுப் பாடல்கள்..

<p>நினைவுப் பாடல்கள்..</p>
நெற்கொழுதாசன்

 

தடமழிந்த நிலமிருந்து

எழுகின்ற குரல் கேட்கிறதா,

 

சாம்பல்மேடுகளில் படர்ந்த காற்றில்

உறைந்து கிடக்கும்

உயிர்ச்சூடு புரிகிறதா,

 

துயர் துடைக்கும்

கனவைச் சுமந்தவர்களின்

நடையோசை எதிரொலிக்கிறதா,

 

தோழர்களே....

கருகியழிந்த இனமொன்றின் பாடல்களல்லவா

இவை,

அன்றொருநாள் எம் நிலமெங்கும்

ஓங்கியொலித்த விடுதலையின் குரல்களல்லவா,

 

இதோ,

வீழ்ந்துபட்ட நிலமிருந்து

தமிழ்க்கிழவி அழைக்கிறாள்

யாருமில்லையாம் குரல் செவிமடுக்க,

 

******

காலம்

தன்னை நிசப்தமாக்கிக்கிடக்கிறது.

 

முதுநிலமும்

நெடிதுயர்ந்த மரங்களும்

கணப்பொழுதில் கலைந்துருமாறும்

கார்த்திகை மேகங்களும்

நீண்ட குரலெடுக்கும் கருங்குருவிகளும்

அமைதியாகிக் கிடக்கிறது

 

யுகத்தொடர்ச்சியின்

சிதைவுகளிலிருந்து பரவுகின்ற ஓலமொன்று

எல்லாம் மீறிக்கேட்கிறது.

 

இருந்தும்

பெருநிலமிருந்து

பாடிக்கொண்டிருக்கிறாள் தமிழ்க்கிழவி

 

அவள்,

பிளவுண்ட நிலமிருக்கும்

தன்னுயிர்க்கூடுகள் உறங்கவொரு தாலாட்டைத்தான் பாடுகிறாள்.

உருகியழிந்தவர்கள் கனவின் மீதியைத்தான் பாடுகிறாள்.

 

*****

எங்களிடம் செவிகளில்லை

எங்களிடம் விழிகளில்லை

எங்களிடம் தான் மொழியுமில்லை

வீரயுகமொன்றின் முடிவில் எஞ்சியவர்கள் நாம்.

 

எங்களுடையவை என்பதால் அழிக்கப்பட்டன

எங்களுடையவை என்பதால் சிதைக்கப்பட்டன

எங்களுடையவை என்பதால் உருமாற்றப்பட்டன

ஊழியின் முடிவில் தனித்துவிடப்படவர்கள் நாங்கள்.

 

எங்கள் முதுநிலம் இன்னமும்

கருவழிந்த வலி சுமந்தேயிருக்கிறது.

 

எங்கே எங்கள் குரல்கள்........

எங்கே எங்கள் பாடல்கள்.........   

11/26/2016 12:18:04 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்