Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

 "இன்குலாப் ஒரு புரட்சிக்காரன்"

 "இன்குலாப் ஒரு புரட்சிக்காரன்"
காந்தள்

இன்னலைக்கண்டுருகி
இனிமைத்தமிழுருக்கி
இதயத்தசைவுகளை
இசைத்த குயில்...
'
இன்குலாப்' எனும் புரட்சிக்குயில்...
ஏழுகடல்களும் பாட 
எழுச்சித்தமிழ் தந்த 
தன்மானக்குயில்!


தலித்துக்களுக்காய் மட்டுமல்ல 
தவித்த தமிழரிற்காய் நின்றும்
தனித்துவமாய்க்கூவிய குயில்....
தாழ்ந்தவர் யாருமிலர்
நாமெல்லாம் 'மனிதர்களென'
தமிழனாய் நிமிர்ந்த
தமிழகத்துக்குயில்...

மதம் கடந்து மனம் திறந்து
மனிதம் கூவிய  கவிக்குயில்..
அகிம்சை உரைத்தவரின்
ஒப்புக்குப்போர்த்திய திரைகள்
பற்றி எரியும்போதே  
பாட்டிசைத்த எழுச்சிக்குயில்...

ஈழ மண்ணிருந்த பற்றுதல்களைப் 
போற்றிப் பண்ணிசைத்த குயில்...
முள்ளிவாய்க்கால் மண்ணினின்றும்
தள்ளிவைக்கா தமிழுரைத்த தாய்க்குயில்...
புகழ் தரும் அலங்காரங்களைவிட
தமிழ் பெறும் அங்கீகாரங்களையே
மகிழ்வுற இசைத்த குயில்...
எங்கள் கிளைகளில்  இருக்கும்  

இங்குள்ள குயில்களும் தமிழ் இசைக்கும்...
இன்னும் குயில்கள் வரும், 
இனிமைத்தமிழ் தரும்- 'ஆனால்'
இன்குலாப் எனும் சாகுல் அமீதின்
இதம் பெறுமோ தமிழ்...


இன்னல்களைந்து உயிர் 
பெறுமோ மனிதம்...
விடியலுக்காய் விடிய விடியகூவி
விடியுமுன்னே போனாலும் 
முடியவில்லை எம் பயணம்...
நனைந்தன விழிகளின் ஓரம்
நாளை உயிர் பெறும் வாழ்வு-நீங்கள்
வனைந்த கவிகளால் 
வைரம் பெறும் தமிழ்... 
வடிவம் பெறும் தமிழ்மண்...

12/16/2016 2:10:54 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்