Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

புதிய தலைமுறை

புதிய தலைமுறை
ந.கிருஷ்ணசிங்கம்

 

பேரினவாதிகள் நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும், அவர்களின் சகல சொத்துரிமைகளுக்கும் எதிரானவர்கள். இனரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி, துவேசத்தை விதைத்து அவற்றை விளைவித்து.. வெட்டியள்ளி அனுபவிப்பவர்கள். இதற்கு எமது நாட்டுப் பௌத்த சிங்கள அரசுகள் சிறந்த உதாரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.

எங்களின் உரிமைப்போர் நசுக்கப்பட்டமையை.. எம் மக்களில் மிகுதொகையினர் இறப்புக்குள் ஆக்கப்பட்டமையை.. நம் பெண்ணியம் வதைக்கப்பட்டமையை.. எங்களின் சிசுக்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டமையை.. நம்மவர் தொகையானோர் தொலைக்கப்பட்டமையை.. நெடிய நிலஅபகரிப்புக்குள் எம்மினம் இட்டுவரப்பட்டமையை.. அவர்கள் இடையறாத இன்னல்கள்பட்டுலைய வைத்தமையை.. சொல்லிச்சொல்லி நாடெங்கும் கவனயீற்புச் செய்துவரும் புலம்பெயர்ந்த தமிழர்களின் குரல்களை அடக்குவதற்காக.. உலகத்தினரின் கவனத்தைச் சிதறடிப்பதற்காக சிலபல சுயநலமிகளை எம்தமிழர் மத்தியில் இருந்து பொறுக்கியெடுத்து சமூகசேவையென்ற போர்வையை அவர்களுக்குப் போர்த்திவிட்டு.. அவர்களை சர்வதேசமெங்கும் உலாவிவந்து.. போலி ஐக்கியமே பெரும் நடிப்பாக்கிப் பிழைக்கும் இன்றைய இங்கையரசின் புகழ்பாடுமாறு ஏவிவிடும்பணி எம்நாட்டில் இப்போது தீவிரமாகியுள்ளது.

அந்த வகையில் உருவேற்றி விடப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்த உசாதேவியாவார். கொழும்புநகரில் அமைந்திருந்த மண்டபம் ஒன்றில் உசாதேவி அம்மையார் அரச செலவில் தன்னைப் பாராட்டும் நிகழ்சியை ஒழுங்குசெய்து, அவர் அங்கே தேடிக்கொண்ட பெண்தோழிகளும், சில தோழர்களும் வந்து கூடியிருக்க.. அந்த வரவேற்பு நிகழ்வை நடாத்திக்கொண்டிருந்தார். 

ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்குச் சென்று இலங்கையில் ஈழத்தமிழர்களின் இன்றைய வாழ்வியற் சம உரிமைகள் குறித்து அந்த அம்மையார் பல கூட்டங்களில் கலந்துபேசி.. தான் வெட்டிநிமித்திவிட்டு வந்தருளிய பெருமையைப் பலரும் போற்றவே.. இந்தச் சங்கூதும் சடங்கை ஏதோவோர் அமைப்பின் பெயரால் அங்கே ஏற்படுத்தியிருந்தார்.

சரியாகப் பத்து மணிக்கு அவர் வருகை தருவார் என்று எதிர்பார்த்து மாலைகளோடு அமர்ந்திருந்த பிரமுகர்களுக்கு அம்மையாரின் வரவானது வெகுதாமதமாவதால் சற்றுச்சோர்வு ஏற்படவே.. தொண்டர்கள் அவர்களுக்கு பலகாரங்களும்.. தேனீரும் வழங்கித தேற்றிக் கொண்டிருக்க அம்மையாரும் வந்துவிட்டார்.

«மன்னிக்கவேணும்.. சற்று லேட்டாப்போச்சு!.. பத்திரிகைக்காறன் ஒருத்தன் வந்து பேட்டியென்ற பெயரால்.. என்ரை பொழுதை எடுத்திட்டான். என்னமாதிரி.. எல்லாரும் நலந்தானே?..» என்று கேட்டு, அவையோரின் கைதட்டல்களிடையே.. தனது சாய உதட்டைச் சரிசெய்துகொண்டு அவர் பேசத்தொடங்கினார்.

«வெளிநாடுகளுக்குப் போய்வந்த எனக்கு இந்தளவு பெரிய வரவேற்பைத் தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். முதல் பரிஸ் நகருக்குப் போனேன். எல்லா ஏற்பாடுகளையும் எமது நாட்டு கைகொமிஸனர்தான் செய்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் சந்திப்புகளிலும் கூட்டங்களிலும் பேசினேன். எமது தேசத்தில் நிலவிய இனப்பிரச்சனைகள் சம்பந்தமான இன்றைய முன்னேற்றத்தை.. எடுத்தெடுத்துக் கூறினேன். அங்கெல்லாம் வருகை தந்திருந்த எல்லோரும் ஆழ்ந்த அவதானிப்போடு கேட்டு.. தமது சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டார்கள்.

சபையோரின் கைதட்டல்கள் நெடுநேரம் அங்கே தொடர்ந்தன.. அம்மையார் அவர்கள் பெரிதும் மகிழ்வோடு நன்றி கூறியவராய்.. தனது உரையைத் தொடர்ந்தார். «பிரான்சிலே குக்குரின் நகரிலே நடந்த பெண்கள் மகாநாட்டிலும் நான் இலங்கையின் பிரதிநிதியாய்க் கலந்துகொண்டு பேசினேன்..»

«மிகவும் மகிழ்ச்சி அம்மா!.. அங்கு என்னவெல்லாம் பேசிநீர்கள்..» என்று ஒரு இளம்பெண் எழுந்து கேட்கவே.. 

அம்மையாரும் அவையினரும் அதிர்ந்துபோயினர். ஏனெனில்.. இதுவரை அவரைச் சுற்றித்திரிபவர்கள் எவரும் எதிர்நிமிர்ந்து பொதுநிகழ்வுகளில் இப்படியான குறுக்குக் கேள்விகளைக் கேட்டதில்லை. காரணம் அவரிடம் சலுகைகளைப் பெற்றுச் சரணாகதியாகி வாழ்ந்து.. வாலாட்டும் வர்க்கத்தினரே அன்றும் அங்கே கூடி அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவரின் மகளே இந்தக் கேள்வியைக் கேட்டவராவார்.

«நிறையப் பேசினேன்»

«நிறைய என்றால் அதிலே கொஞ்சமாவது சொல்லுங்களேன் கேட்பம்..» என்று அந்த இளம்பெண் தொடர்ந்து கேட்கவே..

அம்மையார்.. «அதையெல்லாம் இன்று விளக்க எனக்கு நேரம் போதாது. அவையெல்லாம் மிகவும் நீண்டவை.. பரிசிலே நான் பல இடங்களைப் பார்த்தேன். ஈபிள் டவர் பிரமாண்டமான கோபுரம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதை ஒரு நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்புறம் சாம்டி எலிசஸ்.. இங்கேதான் வீரமன்னன் நெப்போலியனின் நினைவு மண்டபம் இருக்கிறது. இங்கே பதினாறு வீதிகள் ஒன்றாய்ச் சந்திக்கின்றன! சர்ச் ஒப் நொட்ரிடாம்,. லுவர் மியுசியம் எல்லாவிடங்களுக்கும் போனேன். லுவர் மியுசியத்திற்றான் மோனாலிஸா ஓவியத்தின் ஒரிஜினல் இருக்கிறது! வர்சையில் அரண்மனைக்கும் போனேன். பரிஸ் என்றால் பரிஸ்தான்!..» அம்மையார் தனது பேச்சில் அவசரம் அடைந்ததுபோல்.. நடித்து  நிறுத்திக்கொள்ளவே.. அங்கே. எல்லோருக்கும் உணவு பரிமாறும் நிகழ்வு தொடங்கியது.

அதே இளம்பெண் பக்கத்தில் அமர்ந்திருந்த தோழியரைப் பார்த்து.. «மெடம், பெண்கள் மாநாட்டுக்குப் போனாவாம். அங்கே என்ன நடந்தது.. என்ன பேசினீர்கள் என்று கேட்டால் பதில் சொல்லாது பரிஸ் மாநகர் உலாபற்றிச் சொல்லி.. நேரத்தை ஓட்டிவிட்டார்.» என்று கூறவே.. அங்கே சிரிப்புபொலியெழுந்து சலசலப்பை உண்டாக்கவே, சினங்கொண்ட உசா அம்மையார் «யாருடைய குட்டியள் இதுகள்.. இதுகளை அடக்குங்க..» என்று உரத்துக்கூறி மிரட்டவே..

«நாங்கள் உங்களிடம் எதைக்கேட்டிட்டோம். ஏதோவெல்லாம் பேசினீகள் என்றீர்களே.. அதிற் கொஞ்சமாவது சொல்லுங்க என்றுதானே கேட்டோம். அதுவொரு கௌரவக் குறைவா? சொந்தநலன்களைப் பெறுவதற்கு உங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்காக இங்கே கூடியவர்களின் பிள்ளைகளாக நாங்கள் இருக்கலாம். ஆனால்.. நாங்கள் அப்படியானவர்கள் இல்லை! நாங்கள் வெறும் கலகக்காரர்களுமில்லை. இனமான ரோசக்காரர்கள். நாங்கள்!»    

அங்கே கசகசப்புகள் ஒலித்தன..  அமைதி குலைந்தது. அந்த அம்மையார் அடக்குமுறையைப் பிரகடனப்படுத்தினார். சுமாதானம் பேசுவோர் தடுத்துநிறுத்த முயன்றும்... எவ்விதமான சமாதானங்களுக்கும் உடன்படாதவர்களாக.. ஒரு குழுவினர்களாக.. பெண்களும், ஆண்களுமாக.. அந்த இளையசந்ததியினர்கள் அங்கிருந்து எழுந்து வெளியேறினர்.     

4/29/2017 2:30:06 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்