Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

நிலவுதிரும் பொழுது

நிலவுதிரும் பொழுது
கிரிஷாந்

 

யாருடையதோ ஒரு நிலவை
எரித்துவிட்டது பகல்

தேம்பியழுகிறார்கள்.
நட்சத்திரங்களையும் தேவதைகளையும்
விசாரித்தனர்
இறுகிய தீயைப் போல்
எரிந்தது பகல்.
பின்னர்
நிலவு பற்றிய கனவுகள்
பகலிலும் வரத் தொடங்கின.
விம்மி விம்மி அழுதனர்.

பின்னொரு பொழுதில்
இருள் அவிழ்ந்தது
பேரழகின் தனிமையை திறந்தது
நிலா! நடசத்திரங்கள்!
இது எப்படி ? ஆனால் அம்மா தான் சொல்கிறாளே!

அந்தக் குழந்தையின் கண்களுக்குள்
அப்படியே விழுந்து விடுகிறது
இன்னுமொரு நிலவும்
சில நட்சத்திரங்களும்

***

தகிக்கும் நாட்கள்

மணலாய் எரிகிறது காலம்
பெரும் பகலை விழுங்க
அசைகிறது நிகழ்
தகிக்கும் நாட்களெல்லாம் இப்படித்தான்

கைகளில் பிசைகிற நாற்றம்
கூடையில் அழுகிய முட்டைகள்
குளிக்காத பிணங்கள்
முழுவதும் வெறுக்கத்தக்கது.

தனித்த வெயில்
நிழல் கருகிய வாசம்
கால்களை சிராய்க்கும் மண் வெடிப்புகள்.
குத்தி நெளிகிறது
காலப் புழுக்கள்.

தசையிலும் நரம்பிலும்
ஊர்ந்தபடி
ஊர்ந்தபடி

10/7/2012 4:14:07 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்